search
Happy Teachers Day
Signature
Heart charmed heart lights
India at the Olympics
நான்கு ஆண்டுகள் பொறியியல் (Engineering) படித்த மாணவர்களை, முன்பு இருந்தது போல் இன்று நிறுவனங்கள் உடனே வேலைக்கு எடுத்துக் கொள்வதில்லை. தனியார் கல்லூரிகளில், பல மாணவர்கள் கடன் வாங்கி, பல லட்சங்கள் செலவு செய்து, படித்து முடித்த பின்னர் உரிய வேலை கிடைப்பதில் இன்று சிரமமாக இருக்கிறது. நாம் படிக்கும் பொறியியல் கல்வி வேலை சார்ந்ததாக இல்லை என்பதே நிதர்சன உண்மை. 1984 ல், ஐந்து ஆண்டுகள் என்று இருந்த பொறியியல் படிப்பை, நான்கு ஆண்டுகள் என்று மாற்றினோம். நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது பொறியியல் படிப்பை 4 ல் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைத்தால் என்ன? நான்கு ஆண்டுகள் சொல்லித் தருவதில் தேவை இல்லாதவற்றை அகற்றி பொது பாடம் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பாடம் என்று அனைத்தையும், 3 வருடங்களில் முடித்து விடலாம். நான்காம் - ஆண்டுக்கு ஆகும் செலவை மிச்சப்படுத்தக் குறு/சிறு தொழில்கள் மாணவர்கள் தொடங்கலாம் அல்லது, வேலைக்குச் சேர என்ன தேவையோ அது சார்ந்து நேரத்தை முதலீடு செய்து சுயமாகக் கற்கலாம். பொறியியல் படிப்புக்கு நான்கு ஆண்டுகள் தேவையா? உங்கள் கருத்து என்ன? நன்றி கார்த்திக் சிதம்பரம்