தமிழ் வாழ்க! தமிழ் வளர்க! என்றால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது.
“தமிழ் படி, படி என்றாலும் யாரும்” படிக்கமாட்டார்கள். தமிழ் சார்ந்து பொருளாதாரம் வளர வேண்டும். இதுவும் தானாக நடந்துவிடாது. அதற்குரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.
கடந்த 8 வாரங்களாக, நம் ஞாயிறு கடிதத்தில், தமிழ் வளர நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள்குறித்து எழுதி வருகிறேன். சக்கரவர்த்தி அறிவழகன் என்ற LinkedIn நண்பர் மீண்டும் ஒரு புரட்சி வருமோ? என்று ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அவருக்கு நன்றி.
என்னைப் பொறுத்தமட்டில் பெரும் புரட்சியெல்லாம் தேவை இல்லை. சிறு சிறு மாற்றங்கள் செய்தாலே, அது பெரு மாற்றங்களுக்கு வித்திடும். தமிழ் சார்ந்து ஒரு பொருளாதாரமும் வளரும். தற்போது உள்ள தமிழின் நிலை நிச்சயம் மாறும். மாற்றுவோம்.
இந்த வாரத்தோடு, இந்தத் தமிழ் தொடரை நிறைவு செய்து, ஏப்ரல் மாத ஞாயிறு கடிதங்களில் செயற்கை நுண்ணறிவு பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். நான் A.I ல் பெரிய வல்லுனர் எல்லாம் இல்லை என்றாலும், வாசிப்பதையும், கவனிப்பதையும் பகிர்வதில் தவறில்லை.”
அடுத்த வாரம் ஞாயிறு கடிதத்தில் சந்திப்போம்.
நன்றி….