எல்.கே.ஜி.சேர்க்கை இவ்வளவு கடினமா ?

பெரிய பெரிய ஆசை – 2

மிகவும் கடினம்

இன்றைய காலக்கட்டத்தில், நமது பகுதிகளில் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதை விட, LKG admission அதாவது ஆரம்பப் பள்ளிகளில் குழந்தையைச் சேர்ப்பது மிகவும் கடினமாக வேலையாக இருக்கிறது.12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியில் சேர வேண்டுமானால் , சரியோ தவறோ அதற்கானத் தனி நுழைவுத் தேர்வுகளும் மதிப்பெண் அடிப்படையிலான ஒரு வெளிப்படைத் தன்மை நிறைந்த செயல்முறை ( Process) உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, 40 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதே நிலைமை தான் இப்போதும் தொடர்கிறது இல்லை சில நேரங்களில் இன்னும் கடினமாக இருக்கிறது.

நிர்ணயிக்கும் காரணிகள்

அமெரிக்காவில், உங்களுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருப்பதால், School district பகுதிகள் அதாவது, சிறந்த பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளின் விலையைத் தீர்மானிக்கும் காரணியாகவே பள்ளிகள் தான் இருக்கிறது. நமது பகுதியிலும் சில பள்ளிகளில் , பெற்றோர்கள் இருவரும் படித்திருக்க வேண்டும்; அவர்களது வீடானது மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்; அவர்கள் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக இருக்க வேண்டும் என சில நிபந்தனைகள் உள்ளன. எல்.கே.ஜி, சேர்க்கும் போது, மூன்று கிலோமீட்டர் வீடு அமைந்திருக்கலாம் ஆனால் அதே குழந்தையை யு.கே.ஜி. சேர்க்கும் பொழுது வீடானது இடம் மாறப்பட வாய்ப்புள்ளதல்லவா?

ஏன் வெளிப்படைத் தன்மை அவசியம்?

தமிழகத்தில் 2020 கணக்கின்படி ஆயிரம் மக்களுக்கு 14 குழந்தைகள் பிறக்கின்றார்கள். அதே சமயம் 2021 ன் கணக்கின் படி தமிழக மக்கள் தொகை 8.21 கோடியாகும். இந்தப் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட கணக்கீட்டின் படி, ( 8.21 கோடி / 1000) x 14 = 1.15 கோடி ( 11494000) குழந்தைகள் தமிழ்நாட்டில் பிறக்கிறார்கள்.சராசரியாக ஒரு ஆண்டிற்கு 50,000 முதல் ஒரு லட்சம் குழந்தைகள் எல்.கே.ஜி.போன்ற ஆரம்ப வகுப்புகளில் சேர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இதன் இன்றியமையாத் தேவையை அறிந்து கொள்ளலாம். இதில் வெளிப்படைத் தன்மை என்பது மிகவும் அவசியம்.

பல்வகைத் தன்மை

பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாளர்களிடையே பல்வகைத் தன்மை எனப்படும் diversity வேண்டுமென்ற காரணத்தால், பல இனம், நாடுகளைச் சேர்ந்த மக்களைப் பணியமர்த்துகிறார்கள். அத்தகைய பல்வகைத்தன்மையைப் ஆரம்பப் பள்ளியிலும் அதாவது LKG இல் இருந்தே நடைமுறைப் படுத்தும்போது, அடுத்த தலைமுறையின் அறிவு வளம் மேன்மேலும் பெருகும். Brain drain எனப்படும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாய்நாட்டிற்கு வரத் தயங்குகிறார்கள். அவர்களது அறிவானது அங்கேயே அந்நாட்டிற்காகச் செலவழிக்கப்படுகிறது எனும் வருத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கியக் காரணம், ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் அந்த comfort எனும் சுக வாழ்வு , இங்கும் வேண்டுமென எண்ணுவர். அதிலும் முக்கியமாக தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்குத்தான் முன்னுரிமை. வெளிநாட்டில் சிறந்த பள்ளியில் படித்த குழந்தைகளையோ அல்லது இங்கு குழந்தைகளை ஆரம்பக் கல்வியில் சேர்க்க பெற்றோர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் மிகவும் கடினம். அதற்கும் மேலாக, பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கையும் குறைவு என்பதால், நடைமுறையில் தாம் எதிர்பார்த்த பள்ளியில் சேர்க்கை கிடைக்காது என்பது தான் உண்மை. ஊழலை ஒழிக்க முயலும் நாம், எல்.கே.ஜி.சேர்க்கையிலேயே ஊக்குவிப்பது நியாயமா ? அத்தகைய சூழலில் உருவாகும் குழந்தை எவ்வாறு ஊழல் இல்லா தேசத்தை உருவாக்கும் ?

student
பல்வகைத் தன்மை

முறையான தீர்வு

அதனால் தான் , குழந்தைகளுடைய எல்.கே.ஜி. தேர்வுமுறையை வெளிப்படை தன்மையுடன் அனைவரது முன்னிலையிலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். அந்த பள்ளிக்கு விண்ணப்பித்த அனைத்துக் குழந்தைகளில் எத்தனை மாணவர்கள் அவசியம் என்பதைப் பொறுத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம். அதன் மூலமாக குழந்தைகளிம் பலவகைப்பட்ட சூழ்நிலையும் பல்வகைத் தன்மையும் அதிகரிக்கும். மேலும், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையற்ற சிக்கல்களும் அலைச்சல்களும் குறையும்.
அல்லது இதனை விட சிறந்த வெளிப்படைத் தன்மை நிறைந்த தீர்வு இருந்தாலும் அதனை நடைமுறைக்குக் கொண்டு வரலாம். எனினும் வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியமானது.

கருத்துகளைக் காணொளியாகக் காண…

பார்வைக் குறிப்புகள் (References)

  1. https://www.karthikchidambaram.com/how-can-parents-prepare-for-lkg-admissions/
  2. https://www.ceicdata.com/en/india/vital-statistics-birth-rate-by-states/vital-statistics-birth-rate-per-1000-population-tamil-nadu-urban
  3. https://www.parentcircle.com/the-tension-and-travails-of-getting-admission-to-lkg/article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *