பெரியண்ணன் ஒலி (Audio) வடிவில் 
Periyannan - A History that was never written

பெரியண்ணன் ஒலி (Audio) வடிவில் 

பெரியண்ணன் ஐய்யா, மீனாட்சி அயா நூற்றாண்டினை கடந்த வாரம் செப்டம்பர் மாதம் கொண்டாடினோம். பெரியண்ணன் – எழுதப்படாத வரலாறு என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. 

விழாவில் அன்று நான் பேசுகையில்… தமிழை இன்று பலருக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியவில்லை… இந்த நிலை மாற வேண்டும்… மாறும் என்று பேசினேன். 

தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கள், இந்த புத்தகத்தை ஒலி (Audio) வடிவில் கேட்கலாம்… விரைவில் வெளிவரும் என்று கூறினேன்.

ஆடியோ பதிவெல்லாம்  தயாராக (அன்றே) இருந்தாலும் அந்த விரைவில் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. அமேசானின் Audible போன்ற தளங்களில், இந்தியாவை தலைமை இடமாகக் கொண்ட தமிழ், மற்றும் இந்திய மொழி வெளியீட்டாளர்களுக்கு தங்கள் புத்தகங்களை ஒலி வடிவில் வெளியிடுவது பல சவால்கள் நிறைந்ததாக உள்ளது.

‘பெரியண்ணன்’ ஒரு ஒலி வடிவ புத்தக அனுபவம் மட்டுமல்ல. இந்திய மொழி படைப்புகளை, உலகெங்கும் கொண்டு சேர்க்க மின்னணு விநியோகக் கட்டமைப்பின் (Digital Distribution Infrastructure) உள்ள சவால்களை உணர்த்திய ஒரு அனுபவமாக இருந்தது. இதை ஒருங்கிணைத்த  ஸ்ரீஜா சந்தானம் மற்றும் குழுவிற்கு நன்றிகள்.

சரி… Periyannan – A History that was never written என்று Audible, Spotify, Google, Barnes & Noble மற்றும் பல தளங்களில் நீங்கள் தமிழ் ஒலிவடிவில் கேட்கலாம். புத்தகம் நிச்சயம் உங்கள் வாழ்வை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top