எப்படி வேலை செய்யக் கூடாது?
எப்படி வேலை செய்ய வேண்டும் என்று சென்ற வாரம் ஞாயிறு கடிதத்தில் எழுதினோம். இந்த வாரம் – எப்படி செய்யக் கூடாது?
- முதலில் நம்மால் மட்டுமே ஒரு வேலையைச் செய்ய முடியும் என்று எண்ணுதல் கூடாது. நாம் இல்லை என்றால் இன்னொருவர்.
- ஒரு வேலையை நம்மிடம் கொடுத்தால் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லுதல் அறவே கூடாது. சரியில்லை என்பதால் தான் நம்மிடம் வேலையைத் தருகிறார்கள்.
- வேலை செய்யும் போது கவனச்சிதறல் வருவது இயற்கை. வேலை நேரத்தில் முகநூல் இன்ஸ்ட்டாகிராம் போன்றவற்றைத்தவிர்த்தல் வேண்டும்.
- வேலை இல்லை என்றால் அந்த வேலை இருக்கிறது இந்த வேலை இருக்கிறது என்று தேவையற்ற வேலை செய்து நேரத்தை வீணடித்தல் கூடாது. பல சமயங்களில் தேவையற்ற பல செயல்களைச் செய்வோம் தவிர்த்திடுங்கள்
- வேலை செய்கிறேன் என்று வேலையை மட்டும் செய்தல் கூடாது. நம் குடும்பத்தினருக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். நல்ல உடல் நலமும், மன நலமும் நாம் சிறப்பாக வேலை செய்ய அவசியம். ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்யுங்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் நன்றி.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்
Tags: