சென்னை அண்ணாநகரில், நாங்கள் வசிக்கும் தெருவில் சில வாரங்களுக்கு முன்னர், இரு பெண்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) நடத்த வந்தனர். அவர்கள் கையேடு செயலியில் 30 கேள்விகளுக்கு மேல் இருந்தது கேட்டனர்.
நாம் இதற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எண்ணி, அவர்களோடு 10-15 நிமிடங்கள் உரையாடி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.
செயலியில் பதிவேற்றம் செய்துகொண்டனர். அவர்கள் சென்ற பின் எனக்கு ஒரு வித மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
கடந்த வாரம், அதே பெண்மணி மறுபடியும் எங்கள் வீட்டுக்கு வந்தார். போனமுறை கொடுத்த தகவல்கள் சரியாகப் பதிவாகவில்லை. செயலியில் ஏதோ பிரச்சனை. மீண்டும் ஒரு முறை தகவல்களைத் தொடுங்கள் என்று கேட்டார்.
கோபம் வந்தது. முடியாது என்றேன். இல்லை சார் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார். உங்கள் மேல் கோபம் இல்லை. இது போல் வரும்போது செயலி சரியாக வேலை செய்ய வேண்டாமா என்று கேட்டேன். மறுபடியும் தகவல்களைக் கொடுத்தேன்.
தெருவில் உள்ள மற்றவர்களின் வீடுகளுக்கும் மறுபடியும் சென்று அந்த பெண் அவர் வேலையை அழகாகச் செய்தார். ஆனால், இது போல் முன்னெடுப்புகளை அரசு செய்யும் போது, முதல் முறையே சரியாகச் செய்தால் (சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி) நம் அனைவருக்கும், அரசுக்கும் நேரமும், பணமும் மிச்சம் மாகும்.
நன்றி.