இறையன்பு எழுதிய ‘தோன்றியதென் சிந்தைக்கே’ என்ற நூலினை குடிமைப் பணித் தேர்வுக்காக படித்து வரும் நண்பர் அருண் பிரபாகர் கடந்த வருடம் சந்திக்கும்போது பரிசளித்தார்.
அண்மையில் அந்த புத்தகத்தை வாசித்தேன்.
வாராவாரம் தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இறையன்பு சிந்தித்து, சந்தித்து, படித்து, பார்த்து ரசித்து என்று ஒவ்வொரு கட்டுரையையும் அழகாக எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தை வாசித்த போது எனக்கு தோன்றியது:
இந்த புத்தகத்தை வாசித்த பின்னர், ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் ‘How Not to Die’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.
இறையன்பு அவர்கள் அவர் பெயருக்கு பின்னால் இ.அ.ப (I.A.S) என்று போட்டுக்கொண்டு புத்தகத்தை வெளியிடவில்லை.
இந்த பண்பை பிறரும், நாமும் பின்பற்றலாம்.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்