வணக்கம் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2025 ம் ஆண்டு தொடங்கும்முன், 2024ல் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று எண்ணினோம்? அதைச் செய்தோமா என்று திரும்பிப் பார்த்தேன்.
தினசரி செய்யும் செயல்களை தினமும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறேன்.(journaling). இது பல வகைகளில் எனக்கு உதவுகிறது. 2024ல் ஒரு நாளின் இரு பெரு வெற்றிகளையும்[ Two big wins) வார் இறுதியில் அந்த வாரத்தின் வெற்றிகளையும் (weekly wins), மாத இறுதியில், அந்த மாதத்தின் வெற்றிகளையும் (Monthly Wins), குறிப்பெடுத்து எழுதிக் கொண்டேன்.
இது போல் செய்ததால், 2024 ஐ திரும்பிப் பார்க்கும் போது சென்ற வருடத்தில் எதையெல்லாம் சிறப்பாகச் செய்தோம். எதை இன்னும் சிறப்பாகச் செய்து இருக்கலாம் என்பதை நோக்க எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது, இந்த நடைமுறையை பழக்கமாக்கிக் கொண்டு, 2025 திலும் தொடருகிறேன். நீங்களும், இதை செய்து பாருங்கள். பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள், உங்கள் நாளை, மாதத்தை எப்படித் திட்டமிடுகிறீர்கள்? பகிருங்கள்.
நன்றி.