ஒவ்வொரு வாரமும், ஞாயிறு அன்று எழுதினால் என்ன? என்று ஒரு சோதனை முயற்சியாய் தொடங்கிய ஞாயிறு கடிதம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உங்களில் பலர், ஒவ்லொரு வாரமும் ஞாயிறு கடிதம் தவறாமல் படிக்கிறீர்கள் என்று கூறும்போது, அது மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது.
ஞாயிறு கடிதத்தின் மூலம், புது நட்புகளும் உருவாகின்றன. ராஜேந்திர பிரபு அருள்குமரன், லட்சுமி, அண்மையில் வினோத் கிருஷ்ணமூர்த்தி என்று எண்ணற்ற பலர் தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
ஞாயிறு கடிதம் 2025ம் ஆண்டிலும், புதுப்பொலிவுடன், நல்நோக்குடன் தொடரும். 2025ம் ஆண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் நல் உடல் செல்வமும், பொருட் செல்வமும், மன மகிழ்ச்சியும் தரும் ஆண்டாக அமையட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்.