கடந்த வாரம் தெரியாத ஒரு நண்பர், லண்டனில் இருந்து தொடர்பு கொண்டு என்னை அழைத்தார். நம் காணொளியைக் கண்டு அழைக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர், லண்டனில் இருந்து இந்தியா திரும்புவதாகவும், சென்னையில் உள்ள பள்ளியில் தன் மகளைச் சேர்க்கப்போவதாகவும் கூறி, அது குறித்து சில கேள்விகளைக் கேட்டார். என்னைப் பற்றி எப்படித் தெரிந்து கொண்டீர்கள் என்று அவரிடம் கேட்டேன்.
பத்து வருடங்களுக்கு முன்னர், நம் ஊர்களில் ஆரம்பப் பள்ளி சேர்க்கை (LKG Admissions) எவ்வளவு சிரமமாக உள்ளது என்பது பற்றி, நம் வலைதளத்தில் (https://www.karthikchidambaram.com/), கட்டுரை (Blog) ஒன்று எழுதி இருந்தேன். அதைப் படித்ததாகக் கூறினார்.
தெரியாத நண்பரின் அழைப்பு ஒரு வித மகிழ்ச்சியைத் தந்தது. அனைவரும் எழுத வேண்டும் என்பதை மீண்டும் உணர, நல் வாய்ப்பாகவும் அமைந்தது. நாம் எழுதியதைப் பகிர்வதால் நிறைய நன்மைகளும் வருகின்றன.
அண்மையில் ஆஸ்டின் கிளியோன் எழுதிய ‘SHOW YOUR WORK ‘ (உங்கள் வேலையைக் காட்டுங்கள்) என்ற ஒரு புத்தகம் படித்தேன். அதில் அவரும் இதே கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
எழுதுங்கள் – பகிருங்கள்.
நன்றி,
கார்த்திக் சிதம்பரம்.