நிலையாய் இருத்தல் (Consistency)
Consistency

நிலையாய் இருத்தல் (Consistency)

நாம் செய்யும் செயலை, வேலையை நிலையாய் எப்படிச் செய்வது? ஒரு செயலை, சில நாட்கள் செய்துவிட்டு, நிலையாய் தொடர முடியாமல் போவது எதனால்? இந்தக் கேள்வி எனக்கும் உண்டு.

உதாரணமாக, புத்தகங்கள் வாசிப்பேன். ஆனால் சில வருடங்கள், தொடர்ச்சியாக வாசிக்க இயலவில்லை.

இதற்கு, ஒரு வகை சோம்பேறித்தனம் தான் காரணம். புத்தகங்கள் வாசிக்காத வருடங்களில், வளர்ச்சி குறைவதை நன்கு உணர்ந்தேன். பயம் வந்தது. மறுபடி, வாசிப்பதைத் தொடர்ந்து பழக்கமாக்கிக் கொண்டதால் ஒரு வித மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

சில செயல்களை, பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக செய்ய முடியாமல் போகலாம். உதாரணமாக, சில நாட்கள் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்ய இயலாமல் போகும். சில நாட்கள் தடை வந்தாலும், அதை உணர்ந்து தொடர்வது சாமர்த்தியம். தொடராமல், நாட்கள் வாரங்கள் ஆகும்போது, மாதங்கள் ஆகி பழக்கம் மறந்து போகும்.

நாம் செய்யும் செயலால் வாழ்வு மேம்படுமா? தொலைநோக்கில் பயன் தருமா? என்பதை நோக்குங்கள். ஒரு செயலை நிலையாய் (Consistent) செய்திடும்போது அதனால் வரும் பயன்கள் ஏராளம்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top