மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச்
மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச்

மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச்

சாப்பிடுங்க மில்க் பிக்கிஸ், கத்துக்கோங்க திருக்குறள்’ என்ற விளம்பரத்தை சாலைகளில் பார்த்தேன்.

நண்பர்கள் சங்கர விநாயகம், பிலிமன் பிலிப் உட்பட பலரும் குறுஞ்செய்தி அனுப்பினர். வீட்டின் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று மில்க் பிக்கிஸ் வாங்கியாச்சு…

தமிழ் வளர தமிழும் பொருளும் சேர வேண்டும், தமிழ் சேவை அல்ல போன்ற கருத்துக்களை நம் ஞாயிறு கடிதத்தில் நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் புகழ்பெற்ற பிரிட்டானியா நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி.

தமிழையும், “பொருளையும்” அழகாக சேர்த்துள்ளனர்.

நம் தமிழை நமோர் ஆங்கிலத்தில் எழுதும் இக்காலத்தில், தமிழையும் அதன் எழுத்துக்களையும், திருக்குறளையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அழகாக விளக்கி செயல்படுத்தியுள்ள பிரிட்டானியா நிறுவனத்திற்கும்,

அதன் சந்தைப்படுத்துதல் குழுவிற்கும் பாராட்டுக்கள்.

சரி… நம் திருக்குறள் சேலஞ்ச்:

முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.

தமிழால் பணம் வளர்ந்தால் தமிழும் வளரும்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top