250 வருடங்களுக்கு முன்னர் ஜூலை 4 அன்று ஒரு சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட நாடு அமெரிக்கா. 1776 ஆம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல் சுதந்திரம் பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்துக் கொண்டது.
இதன் பின்னர் ஏகப்பட்ட போராட்டங்கள், போர்கள். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த போது நடைபெற்ற உள்நாட்டுப் போர் (Civil War, 1861–1865), 19-ம் நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் என்று பல போர்கள், பொருளாதார நெருக்கடிகள், சமூக மாற்றங்கள்.
எந்த ஒரு அமைப்போ, நிறுவனமோ, நாடோ 250 வருடங்கள் கழித்தும் முன்னணியில் இருப்பது என்பது வியப்பான ஒன்று. இதற்கு ஆரம்பத்தில் அவர்கள் அமைத்த கட்டமைப்பு, ஆராய்ச்சியில் செய்த முதலீடு, காலத்திற்கு ஏற்ப மாறியது என்று பல காரணங்கள்.
அமெரிக்காவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக நான் கருதுவது, அமெரிக்காவின் அதிபர் யாராக இருந்தாலும் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்க முடியாது. வேறு ஒருவருக்கு வழிவிட வேண்டும்.
இது ஒரு நல்ல முறை தானே?
இந்த முறையை இந்தியாவில் நம் பிரதமர்களும் ஏன் பின்பற்றக் கூடாது?
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துகள்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்