ஐபேடும் சிறுமியும்

ஐபேடும் சிறுமியும்

ஐபேட் (iPAD) அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அது. அப்போது நாங்கள் கலிபோர்னியாவில் இருந்தோம். எங்கள் வீட்டிற்கு குடும்ப நண்பர் ருவரின் 10 வயது மகளும், அந்த சிறுமியின் அம்மாவும் வந்திருந்து ஒரு வார காலம் எங்களுடன் தங்கினர்.

விடுமுறை முடிந்து திரும்பும் முன்னர், நாங்கள் சிறுமிக்கு ஒரு நல்ல பரிசளிக்கலாம் என்று எண்ணினோம். 

சரி, ஐபேட் ஒன்று கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அது சற்று விலையுயர்ந்தது. சிறுமியும் விரும்புவாள் என்று எண்ணி பரிசளித்தோம்.

உடனே அந்த சிறுமி, மகிழ்ச்சி அடைந்தாலும், இவ்வளவு விலையுயர்ந்த பொருளை வாங்கலாமா? என்று அவளின் அப்பாவிற்கு தொலைபேசியில் அழைத்தாள். 

சிறுமிக்கு ஐபேட் ஆசை என்றாலும், அப்பா வேண்டாம் என்று கூற சிறுமி சற்று அழ ஆரம்பித்தாள்.

சிறுமியின் அப்பா (என் நண்பர்) என்னிடம் பேசினார். உங்கள் அன்புக்கு நன்றி, ஆனால் இந்தப் பரிசு எங்கள் மகளுக்கு வேண்டாம் என்றார். 

எங்களுக்கு வருத்தம். எனக்கு கோபம் கூட வந்தது… என்னடா இது… இதுபோல் ஒன்று கொடுக்கிறோம், வேண்டாம் என்கிறாரே! நம்மை மதிக்கவில்லை என்று கூட நினைத்தேன்.

பல வருடங்கள் கழித்து இன்று அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கையில், சிறுமியின் தந்தை செய்தது எவ்வளவு சரி என்பது நன்றாக விளங்குகிறது.

ஐபேட் போன்ற கருவிகளை நாங்கள் 10 வயது சிறுமிக்கு பரிசளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நன்றி 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top