பொறிக்களம்

பொறிக்களம்

பொறியியல் களம்,… பொறிக்களம்… எந்த ஒரு கண்டுபிடிப்பும், தான் ஒருவர்தான் கண்டுபிடித்தேன் என்று உரிமை கொண்டாட முடியாது. பெரும் கூட்டு முயற்சியால்தான் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் உருவாகின்றன. இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு ஒரு பெரும் தளமாக விளங்குபவை கல்லூரிகள்.

நம் DCKAP Incubation Centre, அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி (G.C.T), கோயம்புத்தூரில் இயங்குகிறது. நாமும், G.C.T-யும் இணைந்து செப்டம்பர் 25, 26 தேதிகளில் ‘பொறிக்களம்’ – ஸ்டார்ட்அப் கண்காட்சி மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடத்தினோம்.

என்னதான் இதே கல்லூரியில் படித்திருந்தாலும், இதைச் செயல்படுத்தியது ஒரு பெரும் கனவுதான். பெரும் முயற்சி. G.C.T-யின் அனைத்துத் துறைகளும் இணைந்து, அதன் முதன்மை நிகழ்வாக, பல்துறை ஆய்வுக் கருத்தரங்கம் மற்றும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடப்பது 25-30 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். முழுக்க முழுக்க G.C.T கல்லூரி மாணவர்களால் செயல்படுத்தப்பட்டது ‘பொறிக்களம்’. இது குறித்து விரிவாக LinkedIn மற்றும் Wednesday Hustle-ல் பகிர்ந்துள்ளேன். வாசியுங்கள்.

‘பொறிக்களம் தெறிக்கட்டும்’ என்று நம் G.C.T கல்லூரி முதல்வர் வாழ்த்தினார். அவர் கூறியது போல் ‘பொறிக்களம்’ தெறிக்கட்டும்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top