நாம் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் ஏதோ ஒரு பெரிய தோல்வியை நோக்கி நகர்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவர்கள் 10 வெவ்வேறு முயற்சிகள் செய்வார்கள். அதில் 8 தோல்வி அடையும். 1-2 வெற்றி பெறும்.
ஒரு முறை ஒரு நிறுவனத்தில் ஆரம்பகால முதலீடு (Angel Investing) செய்யலாம் என்று முயற்சி செய்து பார்த்தேன். ஒரு தொகையை முதலீடு செய்தேன். அவ்வாறு செய்யாமல் NIFTY 50 பங்குகள் வாங்கி இருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும். பணம் முதலீடு செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.
பல வருடங்கள் கழித்து நான் முதலீடு செய்த தொகையில் பாதியைத் திருப்பித் தந்தார்கள். பலமுறை என்னிடம் நீ இதில் முதலீடு செய்திருக்கக் கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஆனால் இது ஒரு முயற்சி. இப்படிதானே கற்றுக்கொள்ள முடியும்.
சோதனை முயற்சிகள் செய்யும்போது தான் கற்றல்கள் அதிகம். வெற்றிகளும் அதிகம். உங்கள் வீட்டில் யாரும் முயற்சி செய்து பணத்தை இழந்தால் ஊக்கப் படுத்தூங்கள். நிச்சயம் அந்தக் கற்றல்களில் இருந்து அவர்கள் மீண்டு வருவார்கள்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்