வர வரைக்கும் லாபம் 
வர வரைக்கும் லாபம் 

வர வரைக்கும் லாபம் 

நம் இக்கட்டான சூழல்களில் உதவும் என்றுதான் மருத்துவக் காப்பீடு எடுக்கிறோம். ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்று பெரும்பாலானோருக்கு (நான் உட்பட) தெரிவதில்லை. இது குறித்து 31/05/2026 ஞாயிறு கடிதத்தில் எழுதி உள்ளேன்.

மருந்து, மாத்திரைகள் வாங்கவும் இந்தக் காப்பீடுகள் பயன்படுகின்றன. சரி… இது எனக்கு ஆன செலவு. இதற்கு ரசீதுகள் எல்லாம் இருக்கின்றன. மருத்துவமனைக்கு ஏற்கனவே 3,25,000 ரூபாய் கட்டியாச்சு. இதை காப்பீடு நிறுவனத்திடம் கொடுத்தால், கணக்குப்படி 3,11,000 ரூபாய் நமக்குத் தர வேண்டும். இதுவே வரையறை என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் பல நேரங்களில் காப்பீடு நிறுவனமோ, அவர்களுக்குத் தோன்றிய 20,000, அல்லது 30,000 என்று தருவர்.

ஏன் என்று நாம் கேள்வி கேட்க வேண்டும். சில நேரங்களில் சண்டையிடவும் நேரிடும். நீங்கள் கேட்பது சரிதான் என்று 2,25,000 ரூபாய் தருவர். சரி..என்று நாம் விட்டுவிடலாம். உற்று நோக்கி கேள்விகள் கேட்டால் இன்னும் கொஞ்சம் பணம் வரும். இன்னும் போராடினால் நமக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.

போராட எல்லாம் நேரம் இல்லை… தெம்பும் இல்லை என்று விட்டு விடுவோரும் உண்டு. வந்த வரை லாபம் என்று மறு பேச்சு பேசாமல் வாங்கிக் கொள்வோரும் உண்டு.

நோயின் வலியை விட, சில சமயங்களில் இந்தக் காப்பீடு நிறுவனங்கள் ஏற்படுத்தும் வலி அதிகம்.

தற்போது உள்ள நிலை மாற காப்பீடு நிறுவனங்களும், 

அரசும் ஆவண செய்தல் காலத்தின்  தேவை.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

நன்றி.
கார்த்திக் சிதம்பரம்

Category:
Tags:
Share
Download Download
Top