இது தானா விடுதலை? 
இது தானா விடுதலை?

இது தானா விடுதலை? 

ஆங்கிலேயர் 16ம் நூற்றாண்டில் இந்தியா வந்து, 17-ம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக நம்மையே ஆண்டனர்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அவர்களிடம் இருந்து விடுபட்டோம். அதை ஒரு கொண்டாட்டமாக சுதந்திர தினம் என்றும் கொண்டாடுகிறோம். 

நாம் வாங்கி, கட்டிய வீட்டில் ஒருவர் ஆக்கிரமித்து, பல வருடங்களாக போராடி ஒரு வழியாக அவரை காலி செய்த பின்னர், நாம் நம் வீட்டை சுத்தம் செய்வோமா? 

அல்லது ஆக்கிரமித்த நபர் பின்பற்றிய நடைமுறைகளையே பின்பற்றுவோமா? 

நாம் சுதந்திரம் பெற்று 79 வருடங்கள் முடிந்த நிலையில், ஆங்கிலேயரிடமிருந்து எதைக் கற்றுக்கொண்டு தொடர்கிறோம், எதை விடுகிறோம் என்பதில்தான் நம் வளர்ச்சியும், கலாச்சாரமும் பாதகாக்கப்படுகிறது. 

ஆங்கிலேயர் கொண்டு வந்த அவர்களின் மொழி இன்று நம்மை ஆதிக்கம் செய்கிறது. இதுவே நம் வளர்ச்சிக்கு சிறந்தது என்று நாம் பழகியும் விட்டோம். ஆனால் நம்மை ஆட்சி செய்தோரின் நிலையே இன்று செல்வச் செழிப்பாக இல்லை என்பது உண்மை.

ஆங்கிலம் நல்ல இணைப்பு மொழிதான். இன்று அதை மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்யும் முன், நாம் செல்வச் செழிப்போடுதானே இருந்தோம். 

நம் மொழிகள் எல்லாம் வளர்ந்தனவே!

ஆனால் இன்று? இது தானா விடுதலை? 

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags: Tamil
Share
Download Download
Top