நம் வீட்டில் பிரச்சினைகள் வரும்போது அனைத்தையும் உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதுபோல் செய்ய முற்படும்போது சிறு பிரச்சினைகளும் தீவரம் அடைகின்றன.
நாம் ஒருவரிடம் ஒன்றை செய்யச் சொல்லி அவர்கள் செய்யவில்லை என்றால்… நம் அலுவலகமாக இருந்தால் பல கேள்விகள் கேட்கலாம்.
ஆனால் வீட்டில் இதுபோல் கேள்விகள் கேட்கும்போது விவாதம்தான் அதிகரிக்கும்.
அந்த வேலையை நாமே செய்து விடுவது பல சமயங்களில் சிறப்பானதாக அமைகிறது.
இவ்வாறாக இல்லாமல் நீ இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று கோபப்படுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
நாம் ஒன்றைக் கேட்டு அதை மற்றொருவர் உடனே தருவதும், தராமல் இருப்பதும், நாம் நடந்து கொள்ளும் விதம், நாம் அவர்களிடமும், பிறரிடமும் அதே போன்று ஒரு சூழ்நிலையில் எப்படிப் பழகினோம் போன்ற பலவற்றைப் பொறுத்தது.
நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் கோபப்படாமல் ஆறப் போடுங்கள்.
பல சமயங்களில் புண் தானாக ஆறிவிடுகிறது.
நன்றி