மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

மாணவர்களின் நீட் வினாத்தாள் கசிவு போராட்டம் ஆச்சரியம் தரவில்லை. சில வகைகளில் இது எதிர்பார்த்ததுதான். ஆனால் நிச்சயம் வருத்தம் அளிக்கிறது.

3/5/2026 அன்று 11, 12ம் வகுப்புகள் (Dummy School) என்ற தலைப்பிலும், 17/05/2026 அன்று ‘நீட் குளறுபடிகள்’ என்ற தலைப்பிலும் நம் ஞாயிறு கடிதத்தில் எழுதினேன். தற்போது நடக்கும் பிரச்சினையை வெறும் நீட் வினாத்தாள் கசிவாக மட்டும் பார்க்க முடியாது.

பெற்றோர் சிலரிடம் பேசுகையில், நம் பிள்ளைகள் ஏன் 11, 12ம் வகுப்புகள் படிக்க வேண்டும்? 10ம் வகுப்பு முடித்த உடனே நீட் தேர்வுக்கு படித்து, எழுதிவிட வேண்டியது தானே என்று விவாதித்தனர்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஓரளவு வாங்கினாலே போதும். தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சேர்ந்துவிடலாம். ஆனால் இதற்கு ஆகும் செலவு ரூபாய் ஒரு கோடிக்கும் மேல். இதில் பெரும்பாலான கல்லூரிகள் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. முன்பு பணமாக வாங்கினர். இன்று யு.பி.ஐ. முறை. அவ்வளவுதான் வித்தியாசம்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த பத்து ஆண்டுகளில் கல்லூரி கட்டணங்களை ஒழுங்குபடுத்தி மாணவர்கள் அனைவரும் , பயன்படும் வகையில் மாற்றி இருந்தால் நீட் மக்கள் கொண்டாடி இருப்பார். கடந்த 10-15 வருடங்களில் இதுபோல் பெரிய மாற்றங்கள் வரவில்லை என்பது நிதர்சன உண்மை.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top