சி.பி.எஸ்.இ மாணவர்களில் பலர் (பெரும்பாலோனர்) தமிழை வாசிக்கவும், எழுதவும், படிக்கவும் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பது மிகுந்த வருத்தம் தரக்கூடிய செய்தி.
இப்பள்ளிகளில் நான்கில் ஒரு பங்கு மாணவர்கள் தான் தமிழை இரண்டாவது மொழி விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒரு பங்கு மாணவர்கள் இந்தியை தேர்ந்தெடுத்தாலும், மற்றவர்கள் சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற மொழிகளை எளிதாக இருக்கும் என்று நினைத்து படிக்கிறார்கள்.
தமிழை ஆட்சிமொழியாக கொண்ட தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களில் எத்தனை பேர் தமிழை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்?
அவ்வாறு பயிலும் மாணவர்களில் எத்தனை பேருக்கு தமிழை சரியாக எழுதவும் வாசிக்கவும் தெரியும்? இது நம் கல்வி முறையில் உள்ள தவறு. நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று.
இந்தி தெரியாது போடா… என்று ஒரு வாசகம் பிரபலமாக இருந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் பயிலும் பாதி மாணவர்களுக்கு தமிழ் எழுத தெரியாது, படிக்கத் தெரியாது போடா என்ற நிலைதான் இன்று தமிழகத்தில் உள்ளது.
நம் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு ஏன் இந்த அவல நிலை என்பதை ஆராய்ந்து இதை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்து செயல்படுத்துவது காலத்தின் தேவை.
இது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியம் அல்ல.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்