போக்குவரத்து விதிகள் – சாலை விபத்துகள்
Traffic Rules Road Accidents

போக்குவரத்து விதிகள் – சாலை விபத்துகள்

நம் தமிழக நகரங்களின் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது, சாலை விபத்துகள் ஏற்பட முக்கியக் காரணம் என்று 16/07/2023 தேதியிட்ட ஞாயிறு கடிதத்தில் எழுதி இருந்தேன்.

எரியாத போக்குவரத்து விளக்குகள், இரவு மற்றும் விடியற்காலையில் மின்னும் விளக்குகள், மற்றும் நாம் போக்குவரத்து விதிகளைச் சரியாகப் பின்பற்றாததும் (நான் உட்பட) ஒரு காரணம்தான்.

உதாரணமாக, சென்னையின் பல பிரதான சாலைகளில் (அண்ணாநகர் உட்பட) இரவு நேரங்களில் போக்குவரத்து விளக்குகள் மின்னி எரிகின்றன (Flashing Lights).

இதற்குப் பதில் காலை நேரங்களில் பச்சை, சிவப்பு என்று எப்படி விளக்குகள் எரிகின்றனவோ, அதேபோல் இரவு நேரத்திலும் இருந்தால் சாலை விபத்துகள் பெரிதும் தவிர்க்கப்படும்.

எந்நேரத்திலும் போக்குவரத்து விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

ஒவ்வொரு முறை சாலை விபத்துகள் ஏற்படும்போதும், அது ஒரு செய்தியாக மட்டும் இல்லாமல், இது எதனால் ஏற்பட்டது என்ற ஆய்வுகள் தேவை.

நடந்த விபத்தால் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

எத்தனை விபத்துகள் ஏற்படுகின்றன, அடுத்த முறை அதுபோல் ஒரு விபத்து நடக்காமல் இருக்க எப்படி தடுப்பது போன்றவை பற்றி வெளிப்படையாக அனைவருக்கும் பகிர வேண்டும்.

இதுபோல் செய்யும்போது சாலை விபத்து மரணங்கள் பெரும் அளவில் தவிர்க்கப்படும்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top