மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

நம் உடல் நலம் சரியில்லா நேரத்தில் மருத்துவக் காப்பீடு இருந்தால் பயன்படும் என்று தான் நாம் வருடம் தோறும் காப்பீடு கட்டணம் (Premium) கட்டுகிறோம். ஆனால் இதைப் பயன்படுத்தும் போது தான் இதில் உள்ள சிக்கல்கள் புரிகின்றன.

உதாரணமாக, நாம் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், நம் காப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப மருத்துவ செலவுகளை காப்பீடு நிறுவனம் ஏற்க வேண்டும்.

நல்ல வேளையாக நமக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர், “சரி, நீங்கள் வீட்டுக்குப் போகலாம்” என்று வெளியேற்று அறிக்கை (Discharge Summary) ஒன்றைத் தருவார். இதன் பின்னர் காப்பீடு நிறுவனம் மருத்துவமனைக் ஆன செலவுகளை ஏற்க வேண்டும்.

நாம் மருத்துவமனையை விட்டு வெளியேற, காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதல் (Approval) வர ஆறு மணி நேரத்திற்கு மேல் கூட ஆகும். சில சமயம் ஒரு இரவு கூட மருத்துவமனையில் இருக்க நேரிடும். ஒருநாள் அதிகமாகத் தங்குவதற்கான தொகையை நாம் தான் கட்ட வேண்டும் காப்பீடு நிறுவனம் கட்டாது.

காப்பீடு நிறுவனத்தின் ஒப்புதல் வாங்குவது என்பது சில, பல சமயங்களில் போராட்டம் தான். காப்பீட்டுக் கோரிக்கைகளை நிராகரித்தால் தான் காப்பீடு நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும். ₹50,000 ரூபாய் ஒப்புதல் தர வேண்டிய இடத்தில் ₹30,000 மட்டுமே தருவார்கள். மேலும் வேண்டுமானால் பலமுறை பேச வேண்டும்; காத்திருப்பு நேரம் அதிகமாகும். இதனால் பிற நோயாளிக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. தற்போது உள்ள காப்பீடு முறையில் மாற்றங்கள் தேவை.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top