என்ன படிக்கலாம்? 
What can I study?

என்ன படிக்கலாம்? 

இரு வாரங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் அழைத்தார். 

தன் அக்காள் மகன் கல்லூரியில் பொறியியல் படிப்பு சேர, கணினியியல் (Computer Science) சேரலாமா? அல்லது செயற்கை நுண்ணறிவு – தரவு அறிவியல் (A.I, Data Science) சேரலாமா? எது சிறந்தது? என்று என்னிடம் கேட்டார்.

மெல்லப் புன்னகைத்தேன்….

இதேபோன்ற கேள்வி நான் 12ம் வகுப்பு படிக்கும்போது எனக்கும் இருந்தது. என் தந்தையும் எந்தப் பொறியியல் பிரிவு சிறந்தது என்று பலரிடம் கேட்டிருக்கிறார்.

சரி… என் நண்பர் கேட்ட கேள்வி நான் என் நண்பரிடம், “இரண்டு பிரிவுகளுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. எதற்குக் கட்டணம் குறைவோ, அதைத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்” என்று சொன்னேன். 

அவரும் சிரித்துக்கொண்டு நன்றி சொன்னார்.

எல்லாப் படிப்புகளுக்கும் இது பொருந்தாவிட்டாலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் இன்று பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

‘என்ன படிக்கலாம்?” 

என்பதை 12ம் வகுப்பு படிக்கும்போதும், முடிந்த பின்பும் மட்டுமல்ல.

இந்தக் கேள்வியை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை நான் கல்லூரி முடித்து பல ஆண்டுகள் கழித்துத்தான் நன்கு புரிந்துகொண்டேன்.

நன்றி 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top