11, 12 ஆம் வகுப்புகள்
11&12

11, 12 ஆம் வகுப்புகள்

நம் பிள்ளைகள் 12ஆம் வகுப்பை முடித்த பின்னர் ஒரு நல்ல கல்லூரியில் மருத்துவம் அல்லது பொறியியல் சேர வேண்டும் என்றால், 

11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்குச் சென்று படித்தல் அவசியம் இல்லை… 

நாம் கவனம் செலுத்த வேண்டியது போட்டித் தேர்வுகள் இந்த நிலைதான் இன்று உள்ளது. 

நான் அறிந்த பல பெற்றோர், அவர்களின் பிள்ளைகள் 10ம் வகுப்பை முடித்த பின்னர், 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளியில் சேர்க்காமல் ஆலன், ஆகாஷ் போன்ற தனியார் நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகள் படிக்கட்டும் என்று சில பல லட்சங்கள் செலவு செய்து சேர்த்து விடுகின்றனர். 

ஆங்கிலத்தில் இதை “Dummy School” அதாவது போலியான பள்ளி என்று கூறுவர். இந்த முறை நீட் அல்லது ஜெ.இ.இ. தேர்வுகளுக்கு பயன்படுகிறது. 

கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக  புழக்கத்தில் உள்ளது. இதன் பின் விளைவுகள் போகப் போகத் தான் தெரியும்.

பெற்றோர்களின் நிலையும் சற்று புரியாமல்தான்   இருக்கிறது.!

எந்த முறையில் எந்தப் பள்ளியில் சேர்வது, எந்த தனியார் வகுப்புகளைத் தேர்ந்தெடுப்பது என்று ஏகப்பட்ட சந்தேகங்கள். 

செயற்கை நுண்ணறிவு காலத்தில் நாம் இந்த நிலையில் இருப்பது வருத்தம் தருகிறது. தற்போது உள்ள நிலை மாற்றப்பட வேண்டிய ஒன்று. 

நன்றி 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags: Tamil
Share
Download Download
Top