குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ ஒரு கூடல் நடக்கும் போது சில சமயங்களில் நமக்கு அழைப்பு இருக்கும் அல்லது இருக்காது.
சில கூடல்களுக்கு அழையா விருந்தாளியாகவும் செல்லலாம். தவறில்லை.
ஒரு முறை நண்பர் ஒருவர் அவர் திருமணத்திற்கு என்னை அழைக்க மறந்துவிட்டார். ஆனாலும் சென்றேன். மகிழ்ச்சி அடைந்தார் .
இதுபோல் எப்போதும் செல்ல முடியும் என்ற நிலை இருக்காது. சில சமயம் வேண்டுமென்றே நம்மை விட்டுவிட்டுக் கூட கூடல்கள் நடக்கும்.
நம்மை அழைக்கவில்லையே,
நம்மை அழைக்காமல் கூடுகிறார்களே என்று கோபப்படாமல்,
சிரிக்கலாம்!!.
அடுத்த முறையும் அழைக்கவில்லையா? பரவாயில்லை.
ஒருவர் நம்மை அழைப்பதும், அழைக்காததும் நம் கையில் இல்லை.
கூடல் நடத்துவோர், கூடலில் பங்கு பெறுவோர் போன்ற பல்வேறு காரணங்கள் அழைப்பைத் தீர்மானிக்கின்றன.
ஒரு கூடல் வட்டத்தை மட்டும் நம்பாமல், பல கூடல் வட்டங்களை உருவாக்கிக் கொள்வது நமக்கும் பல்வேறு வகையான அனுபவங்களைத் தரும்
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல்!
பெரிதாகச் சிந்திப்போம்!
நன்றி
கார்த்திக் சிதம்பரம்