‘கோதை ‘பதிவிறக்கங்களை Google Play Store ல் பார்க்கும்போது மகிழ்ச்சி தருகிறது. உங்கள் பின்னூட்டத்திற்கு (Feedback) மிக்க நன்றி.
சிலர், தமிழில் பல விசைப்பலகைகள் இருக்கின்றனவே கோதையில் என்ன புதுசு? ஏன் என்ற கேள்வியும் கேட்டனர். சென்ற வாரம் தமிழை இணையத்தில் நன்கு பயன்படுத்தும் நண்பர் ஒருவர், Mac கணினியில் நான் தமிழை எளிதாகத் தட்டச்சு செய்கிறேன் கோதை ஏன் என்றார்? நான் உடனே அவரிடம் Mac ல் எந்தச் செயலி/விசைப்பலகை பயன்படுத்துகிறீர்கள் என்றேன். உதாரணமாக ‘வணக்கம்’ என்று தட்டச்சு செய்ய ‘VANAKA’ என்று உள்ளீடு செய்வேன், அது தமிழில் வணக்கம் என வந்துவிடும் என்றார். சிரித்தேன்.
தமிழ் நன்கு அறிந்த உங்களுக்கு வணக்கம் என்று தமிழில் எழுத VANAKA என்று உள்ளீடு செய்வது சரியான முறையா? என்று கேட்டேன். அவருக்கு ஏன் கோதை என்பது புரிந்தது.
இன்று உள்ள தமிழ் விசைப்பலகைகளில், தமிழ் எழுதும் முறையில் எதுவும் இல்லை. கோ என்ற எழுத்துக்கு “+ே” அழுத்தி “க” அழுத்திப் பின்னர் ‘+ா’ +ேக+ா= கோ’ என்று தட்டச்சு செய்யலாம். தை எழுத, இணைக்கொம்பு ‘)ை’ அழுத்தி ‘த‘ அழுத்தலாம். +ைத=தை. கோ+தை = கோதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும், கோதை’ யோடு விளையாடுங்கள்.
நன்றி.