தொழில்நுட்பத் தமிழுக்கு பல தேவைகள் இருந்தாலும், ஒரு முதல் அவசியத் தேவை – எளிய விசைப்பலகை உள்ளீட்டு முறை (Keyboard Input method). தமிழை நன்கு அறிந்த பலரும், தமிழை எழுத, தட்டச்சு செய்ய ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது, வேதனை தருகிறது. இதற்குத் தமிழை இணையத்தில் பயன்படுத்த ஒரு எளிய முறை இல்லாதது ஒரு முக்கிய காரணம்.
இணையத்தில், தமிழைத் தமிழில் எழுத, ஒரு எளிய முறை கண்டுபிடிக்க நம் டிசிகாப் பள்ளியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஆய்வுகளும், வேலையும் மேற்கொண்டு வருகிறோம்.
‘கோதை’ என்ற எளிய தமிழ் விசைப்பலகை (உள்ளீட்டு முறை) அறிமுகம் செய்கிறோம். கோதையைப் பயன்படுத்தி நாம் எளிதாகத் தமிழைத் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். எப்படித் தமிழில் ‘எழுதுவர்களோ, அதே போல் கோதையைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம்.
Google Play Storeல் “KOTHAI” என்று தேடி ஆண்ட்ராய்டு போன்களில் கோதையைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். iOS (ஐ போன்)க்கான வேலைகளையும் செய்து வருகிறோம்.
இதில் உள்ள குறைகளை உரக்கச் சொல்லுங்கள். சரி செய்வோம். ‘கோதை’யோடு உங்கள் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளை விளையாடச் செய்யுங்கள்.
இனி தான் ஆட்டம் ஆரம்பம்
ஊர் கூடி தேர் இழுப்போம்…..வாங்க
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்