கடந்த வருடம் அக்டோபர் மாதம் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தோம். விசா எல்லாம் தேவை இல்லை என்பதால் பயண ஏற்பாடு எளிதாக இருந்தது.
தாய்லாந்து சுற்றுலாலில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அங்கிருந்த வாகனங்கள் தான். அங்குள்ள கார்களின் எண் பலகைகள் (Number Plate) அவர்களின் தாய் மொழியில் இருந்தது.
கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் தமிழக போக்குவரத்துத் துறை ஈட்டிய வருமானம் 9374 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் மட்டும் 338 லட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. நமக்கு வழங்கப்படும் வாகன எண்களில் T.N (Tamil Nadu) என்ற ஆங்கில எழுத்துக்குப் பதிலாகத் த.நா என்று நம் தமிழில் இருந்தால் என்ன?
உதாரணமாக T.N02 B.M 4777 என்பதற்கு பதிலாகத் த.நா 0.2 க.ச 4777 என்றும்.
ட, த, ப, ற என்று தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது, தமிழ் வளரும். தமிழை, தெரிந்து கொள்வதன் தேவையும் தமிழகத்தில் அதிகரிக்கும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாகனமும், தமிழை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்லும்.
இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
நன்றி.