வாக்களிப்போம்
வாக்களிப்போம்

வாக்களிப்போம்

நாம் தேர்தலை பல முறை பார்த்திருந்தாலும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் என் பார்வையில் எப்போதும் இல்லாதது போல் பல காரணங்களால் வேறுபட்டுத் தெரிகிறது. எப்படியேனும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை தேவையற்ற ஒன்று. நம் காமராசர் தோற்கவில்லையா? அந்தத் தோல்வியும் ஒரு வகையில் வெற்றிதான்.

தேர்தலில் செலவு செய்யப்படும் பணம் அச்சம் தருகிறது. இதற்குப் பல வகைகளில் நாமும் பழகிவிட்டோம். தேர்தல் விளம்பரங்களை மறுபடியும், மறுபடியும் பார்க்கையில் சில சமயங்களில் அலுப்பு வருகிறது. எவ்வளவு தான் செலவு செய்வர்? இது யார் பணம்? செலவு செய்வோர் மக்கள் சேவை செய்வார்களா? அல்லது தொழில் போல் இதை ஒரு முதலீடாகப் பார்த்து தங்கள் லாபத்தைப் பெற்றுக் கொள்வார்களா?

கடந்த தேர்தலில் சிலரிடம் பேசுகையில் ‘யார் வந்தா நமக்கென்ன? நாம் வேலை செய்தால் தான் நமக்கு காசு’ என்று கூறினர். அதே நிலைதான் இப்போதும். இதையெல்லாம் நினைக்கையில் கோபம் வருகிறது.

அதிகாரம் என்பது ஒரு பொறுப்பு. சேவை செய்ய அளிக்கப்பட்ட ஒரு வாய்ப்பு.

தற்போது உள்ள நிலை மாறும். மாற்றுவோம்.

வாக்களிப்போம்.

தேர்தல் நாள் : வியாழன், ஏப்ரல் 23, 2026.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top