திருவேற்காடு டு அண்ணாநகர்
Sunday letter

திருவேற்காடு டு அண்ணாநகர்

மழைக்காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வது என்பது பெரும் செயல். போக்குவரத்து நெரிசல் பயணத்தை மேலும் சிரமப்படுத்தும்

சென்ற வாரம் திருவேற்காட்டில் இருந்து அண்ணாநகர் வர காரை ஓட்டினேன். 12 கி.மீ தூரத்தைக் கடக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது. 15 வருடங்களாக நடைபெற்று வரும் பாலம் வேலைகள் இன்னும் முடியவில்லை. இது குறித்து இந்த வருடம் ஜூலை 6 ஞாயிறு கடிதத்திலும் எழுதி இருக்கிறேன்

15 வருடங்களாக நடைபெற்று வரும் பாலம் வேலையினால் தினசரி நம்மைப் போல் பல ஆயிரம் பேர் அவதிப்படுகின்றனர். ஒவ்வொருவரின் நேரத்தையும் கணக்கிட்டால் எவ்வளவு ‘ பொருட்செலவு வீனாகிறது? நான் சென்ற பாதையில் அவசர மருத்துவ வாகனம் ஒன்றும் தட்டுத்தடுமாறி சென்றது.

ஒரு காலை அல்லது மாலைப் பொழுதில் உயர் பதவிகளில் இருப்போர் போக்குவரத்து நெரிசலைத் தெரிந்து கொள்ள எல்லோரையும் போல் செல்ல வேண்டும் . அப்போது இந்தப் பிரச்சனை தெளிவாகப் புரியும்.

SUNK Cost’ (மூழ்கிய செலவு) என்று சொல்வார்கள். போனது போகட்டும், இந்தப் பால லேலை தாமதத்தால் தினசரி பொது மக்களுக்கு கோடிகள் இழப்பு ஏற்படுகிறது. 

இது போன்ற சிரமப்படும் பயணங்களில் எனக்கு உதவிக்கு வருவது ஒலி உரையாடல்கள் (Podcast). guy kawasaki நடத்தும் `Remarkable People ‘என்ற ஒலி உரையாடலைக் கேட்டு அண்ணாநகர் வந்து சேர்ந்தேன் . 

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top