குறுஞ்செய்தி (ஒரு பக்கக் கதை)
sms

குறுஞ்செய்தி (ஒரு பக்கக் கதை)

ஒரு ஊரில் மாலதி, சுமதி என்று இரு தோழிகள் இருந்தனர். மிகவும் நட்பாகப் பழகி இணைப்பிரியா தோழிகள் ஆனர் . 

அவர்களுக்குள் ஒரு சிறு சண்டை வந்தது. மாலதி, சுமதிக்கு சண்டையை விவரித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். பதிலுக்கு சுமதியும் மாலதிக்கு நீ செய்வது தவறு என்று செய்தி அனுப்பினாள். 

இருவரும் உடனுக்குடன் மாறி, மாறி செய்திகள் அனுப்பிக் கொண்டு குறுஞ்செய்தியை பெரும் செய்தி ஆக்கினர். சண்டை பெரிதானது. இருவருக்கிடையே பேச்சும் நின்று போனது.

சில மாதங்கள் கழித்து, சுமதிக்கு அமுதா என்ற பெண் அறிமுகமாகி இருவரும் தோழிகள் ஆனர். அப்போது இருவருக்குமிடையே ஏதோ ஒரு சண்டை உருவாக சுமதி, அமுதாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். 

பதில் வரவில்லை. அமுதா செய்தியைப் பார்த்திருக்க மாட்டார் என்று மறுபடியும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். அதற்கும் பதில் இல்லை.

முன்று மாதங்களுக்குப் பின்னர் ஏதோ ஒரு உதவி கேட்டு சுமதி, அமுதாவைத் தொடர்பு கொண்டாள். தன்னால் அது முடிந்ததால் அமுதா அதை உடனே செய்து கொடுத்தால்.

நம்மை திட்டி ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பினால் உடனுக்குடன் பதில் அனுப்பி அதைப் பெரும் செய்தியாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை சுமதி புரிந்து கொண்டாள்.

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top