நாம் ரூ 10,000 அல்லது ரூ 1,00,000/–த்தை வங்கியிலோ, பங்குச் சந்தையிலோ முதலீடு செய்தால் அந்தப் பணம் இரட்டிப்பாக எவ்வளவு காலம் ஆகும்!
உலகின் எட்டாவது அதிசயம் கூட்டுவட்டி (Compound Interest) என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வட்டிக்கு வட்டி என்பது ஒரு வகையில் சுகம்
நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு 7 சதவீதம் (7%) கூட்டு வட்டி கிடைத்தால், நம் பணம் இரட்டிப்பாகச் சுமார் பத்து வருடங்கள் ஆகும். அது எப்படி?
72ஐ 7ஆல் வகுக்கவும் (Divide). 72%7=10.2 வருடங்கள். இதுவே, 10 சதவித கூட்டு வட்டியில் பணம் வளர்ந்தால்?
72 % 10=7.2 வருடங்கள் 15 சதவீதம்? 72 % 15 = 4.8 (4.8)வருடங்கள் தான் ஆகும்.
சற்று சிந்தித்துப் பார்த்தால் கூட்டு வட்டியின் மகத்துவம் நன்கு புரியும்.
பணம், பணம் செய்யும் என்பார்களே- அது இதுதான். கூட்டு வட்டியுடன். ’72’ ஐயும் மறந்துவிடாதீர்கள்.
ஆகும் காலத்தைக் கண்டு பிடிக்க இது ஒரு எளியமுறை. இதை 2017/2018ம் ஆண்டு வாக்கில் கான் அகாடமி காணொளியில் தெரிந்து- கொண்டேன். (Rule of 72) என்று தேடிப் பாருங்கள்.
வட்டிக்கு வட்டி கூட்டு வட்டி சுகம்
நன்றி.