தமிழை நன்கு அறிந்த பலர், தமிழை, ஆங்கிலத்தில் எழுதுகிறோம். இதற்குப் பெயர் Tanglish? தமிழ் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தாலும், இருவர் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பும் போது, தமிழைத் தமிழில் அனுப்பாமல் English ல் தட்டச்சு (Type) செய்து அனுப்புகின்றனர். இன்னும் சிலர், தமிழைத் தமிழில் அனுப்பினாலும், அதைத் தட்டச்சு (Type) செய்ய ஆங்கில விசைப்பலகை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ் மொழியை வேறு ஒரு மொழியைக் கொண்டு தட்டச்சு செய்ய வேண்டும் என்று நினைக்கையில் பெரும் வேதனைத் தருகிறது. இதற்கு ஒரு முக்கியக் காரணம், தமிழில் தட்டச்சு எளிதாக இல்லை என்பது தான்.
50,000 க்கு மேல் எழுத்துக்கள் கொண்ட சீன மொழியை 1980 களில் விசைப்பலகையில் கொண்டு வந்தனர். இது சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு பெரும் விதையாக வித்திட்டது.
50,000 க்கு மேல் எழுத்துக்கள் கொண்ட சீன மொழிக்கு இது சாத்தியப்படும்போது, 247 எழுத்துக்கள் கொண்ட நம் தமிழ்மொழிக்கு இது ஏன் சாத்தியமில்லை? பிற இந்திய மொழிகளுக்கு இது ஏன் சாத்தியமில்லை?
தொடரும்…
நன்றி
கார்த்திக் சிதம்பரம்