தமிழின் நிலை
condition of Tamil

தமிழின் நிலை

1440 ம் ஆண்டு ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. 1556 முதல், 1800 வரை தெற்கு ஆசியாவில் அச்சிடபட்ட புத்தகங்களில் 40% தமிழில் தான் இருந்தன.

ஆங்கில மொழிக்கு அடுத்து அதிக புத்தகங்கள் தமிழில் இருந்தன. (குறிப்பு- இரோஜா முத்தையா நூலகப்பதிவு).  இதிலிருந்து தமிழின் பலத்தையும் வளத்தையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.

அச்சு இயந்திரங்கள் இவ்வுலகில் எவ்வளவு. மாற்றங்களை நிகழ்த்தியதோ, அதைவிடப் பெரிய மாற்றங்களைக் கடந்த 50 வருடங்களில் இணையமும் தொழில் நுட்பமும் நம் உலகில் நிகழ்த்தியுள்ளது. அதற்கு ஏற்ப நம் மொழியும் வளர வேண்டும்.

உதாரணமாக 50,000 எழுத்துகளுக்கு மேல் உள்ள சீன மொழியைத் தட்டச்சு (Type) செய்ய வாங் யோங்மின் என்ற விஞ்ஞானி வுபி (Wubi) என்ற விசைப்பலகை உள்ளீட்டு முறையைக்கண்டு பிடித்தார். இதனால் கணிப்பொறி கருவிகளில் சீன மொழியைத் தட்டச்சு செய்ய ஆங்கிலத்தை நாட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.. இது சீனாவின் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

நம் தமிழ் மொழியும், பிற இந்திய மொழிகளும் இதுபோல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப வளர்ந்து உள்ளனவா?

நம் தமிழை இன்று ஆங்கிலத்தில் எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டது எதனால்?

தொடரும்..

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags: Tamil
Share
Download Download
Top