ஜனவரி, 8, 2024 செய்தியின்படி நம் தமிழக அரசு பள்ளிகளில் 700 கோடி ரூபாய் செலவில் 25,000 தொடக்கப் பள்ளிகளிலும் 7904 நடுநிலைப் பள்ளிகளிலும் ஜூன் மாதத்திற்குள் வகுப்புகள் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது (குறிப்பு – இந்தியன் எக்ஸ்பிரஸ்)
நாம் அறிவித்த படி இதை மாற்றி உள்ளோமா? அதன் பயன்பாடு எவ்வாறு உள்ளது போன்றவற்றை தணிக்கை (Audit) செய்ய நல்ல நேரம் இது.
சில அரசுப்பள்ளி மாணவர்களுன் பேசுகையில் சில ஆசிரியர்கள் மட்டும் ஸ்மார்ட் வகுப்பு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர். இது இயற்கை தான். இதில் உள்ள நடைமுறைச் சிக்கலைக் கண்டறிந்து, ஆசிரியர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்க வேண்டும்.
ஸ்மார்ட் வகுப்பு சாதனங்களை, பாடம் நடத்துவதைக் குறைக்கும் கருவியாகக் கருதாமல், மாணவர்களுக்கு, எளிய முறையில் விளக்கங்களைத் தந்து பயிற்றுவிக்கும் ஒரு கருவியாகப் பயன்டுத்தும்போது மாணவர்கள் பயன் அடைவர்.
அறிவிப்புகளை இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தி தொடர் தணிக்கை செய்யும் போது நம் கல்வியின் தரம் மேலும் உயரும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்