நீதி தேவதை
Justice Angel

நீதி தேவதை

நீதியின் முன் அனைவரும் சமமே போன்ற சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக கண்கள் மூடப்பட்ட நிலையில் நீதி தேவதையின் ஒருகையில் தராசும், இன்னொரு கையில் வாளும் வைக்கப்பட்டிருக்கும். இது கிரேக்க இரோமானியர் காலத்து வழக்கம். இந்தியாவில், 1872 ம் ஆண்டு, கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் நீதி தேவதை நிறுவப்பட்டது. 

அக். 20, 2024ல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் கண்கள் கட்டப்படாத கையில் வாள் இல்லாத இந்திய அரசியல் அமைப்பை ஏந்திய நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டம் என்பது பார்வையற்றது அல்ல, நீதி என்பது கண்கள் மூடப்பட்ட நிலையில் தரப்படுவது அல்ல, அனைத்தையும் கண்டு, ஆராய்ந்து கொடுக்க வேண்டியது என்பதை உணர்த்த இந்த மாற்றத்திற்கான சிந்தனைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.

சிலை மாற்றம் என்பது ஒரு குறியீடு. நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவதையின் சிலை மாறுகிறதோ, இல்லையோ நீதித்துறையில் பல அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வர இது ஒரு நல்ல தருணம். இந்த நல்வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி நம் நீதித்துறையில் நல் மாற்றங்களுக்கு வித்திடுவோம். நன்றி. 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top