எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது
எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது

எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது

நாம் நல் எண்ணங்களுன், சிறப்புடன் செயல்பட்டாலும், நாம் செய்வது சரியில்லை என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்வர்

உதாரணமாக நாம் ஒரு விழாவிற்கு சரியான நேரத்தில் சென்று, எல்லோருடனும் நன்கு பழகினாலும்,

நீ அந்த உறவுடன் பேசவில்லை இந்த நண்பரைப் பார்த்துச் சிரிக்கவில்லை, பந்தி சரியாக விசாரிக்கவில்லை என்று கூறுபவர்கள் எப்போதும் இருப்பர்  இது அன்றாட நிகழ்வு.

நாம் பல கடைகள் ஏறி இறங்கி, மிகுந்த அன்புடன் வாங்கிய பொருள் ஒருவருக்கு மிகச் சாதாரணமாகத் தெரியலாம். சிரமப்படாமல் வாங்கிக் கொடுக்கும் பொருள் மதிப்பு மிக்கதாகத் தெரியலாம். இவை அனைத்தும் பொருளை யார் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையும்.

குறை கூறுபவர்கள் என்றும் இருக்கத்தான் செய்வர். எதை எடுத்துக்கொள்ள வேண்டும், வேண்டாம் என்பதில் நமக்குத் தெளிவு தேவை. எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது.

நன்றி!!.

இப்படிக்கு

கார்த்தி சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top