இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் கோயில் சென்றிருந்தேன். கூகுளில் கோயில் காலை 6:00 மணிக்குத் திறக்கும் என்று போட்டிருந்தது.
காலை 5:00 மணிக்கு எழுந்து 5:30 மணிக்கு கிளம்பி, 6:00 மணிக்கு சென்னை அண்ணாநகரில் இருந்து பாம்பன் சுவாமிகள் கோயில் நானும் என் மனைவியும் சென்றோம்.
கோயிலின் வாசல் திறந்திருந்தாலும் பாம்பன் சுவாமிகளை தரிசிக்க இயலவில்லை நடை திறக்கவில்லை. என்னடா இது என்று விசாரித்தால், 7:00 மணிக்குத்தான் கோயில் திறப்பார்கள் என்று கூறினர்.
கோயிலை விடியற்காலையில் திறந்தால் தானே வருவோருக்கு வசதியாக இருக்கும் என்று அங்கு சேவை செய்யும் ஒருவரிடம் பேசியபோது, அவர் “நானும் நிறைய முறை சொல்லி விட்டேன்; அவர்கள் காலை ஏழு மணிக்குத்தான் திறப்பார்கள்” என்று கூறினார். காத்திருந்து தரிசனம் பெற்று திரும்பி வந்தோம்.
இதுவே சென்னை அண்ணாநகரில் இருக்கும் ஐயப்பன் கோயில் மற்றும் பல கோயில்கள் விடியற்காலையிலே திறந்து விடுகின்றன. கோயில்கள் அரசின் அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட வேண்டுமா என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
எது எப்படியோ… பாம்பன் சுவாமிகள் கோயில் நிர்வாகம், அவர்கள் குறிப்பிட்டதைப் போல் காலை 6 மணிக்கோ அல்லது அதற்கு முன்னரோ கோயிலைத் திறக்க வேண்டும். இல்லையேல், இல்லையெனில் காலை ஏழு மணிக்குத்தான் கோயில் திறப்போம் என்று அவர்கள் குறிப்பை மாற்றவேண்டும்.
நன்றி