நாம் ஒரு வாகனத்தை ஓட்டும்போது நம் அருகில் இருப்பவர், அப்படி ஓட்டு, இப்படி ஓட்டு, அங்கே ஒரு வேகத்தடை (Speed breaker) என்று ஆலோசனைகள் சொல்லிக் கொண்டே வந்தால், நாம் வாகனம் கவனமாக ஓட்ட முடியுமா!
ஒரு வீட்டில் மனைவியோ, கணவனோ, சமைக்கும்போது காய்கறி நறுக்கி உதவுவது நல்ல செயல். ஆனால் ஒரே நேரத்தில் இருவர் சமைக்கும்போது, அது தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுக்கும். சமையலும் நாம் எதிர்பார்த்தது போல் வராது. இதுபோல் தான் நாம் செய்யும் வேலையும்.
என்னால் தான் முடியும் என்று எண்ணாமல் ஒருவரை நம்பி வேலையைக் கொடுங்கள். அவர்கள் செய்யும் வேலையில் தவறு இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள், ஊக்கம் கொடுங்கள், ஆலோசனை வழங்குங்கள். ஆனால் அவர்கள் வேலை செய்யும்போது அப்படி செய், இப்படி செய் என்று சொல்லாதீர்கள்.
சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை நாம் தொந்தரவு செய்யாமல் விட்டால் நம்மைவிட மிகத் திறமையாக அவர்கள் வேலை செய்வர். ஒவ்வொரு வேலையும் என்னால் தான் முடியும் என்று எண்ணாதீர்கள்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்