தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு,


வணக்கம்.

தாங்கள் 26/06/2026 அன்று பங்கு கொண்ட ‘START RUN, STOP DRUGS’ நிகழ்ச்சியை காணொளியில் பார்த்தேன். இந்நிகழ்வில் மக்களோடு சேர்ந்து ஓடியது நிகழ்ச்சிக்கு சிறப்பு.

 உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் அவசியத்தை இது நன்கு உணர்த்தியது. தாங்கள் இதில் பங்கு கொண்டு, ஓடி உத்வேகம் தந்ததற்கு மிக்க நன்றி.

ஆனால், தாங்கள் கையெழுத்திடும் போது
விளையாட்டை எடு…
போதைப்பொருளை விடு…
என்று எழுதுவதை தவிர்த்து, நம் தமிழை ஆங்கிலத்தில் எழுதினீர்கள். 

இது மிகவும் வருத்தம் அளித்தது. கடுங் கோபமும் வந்தது.

தமிழக முதலமைச்சராக இருக்கும் தாங்களே, நம் தமிழை தமிழில் எழுதாமல் இப்படி எழுதினால்? 

உங்களைப் பார்த்து வளரும் இளைஞர்கள், மாணவ மாணவிகள் 

தமிழை எப்படி பயன்படுத்துவார்கள்?

 தமிழ் எப்படி வளரும்?

ஏன் மாணவர்கள் தமிழ் படிக்க வேண்டும்?

தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்துங்கள்.


நன்றி.. 

மாற்றத்தை எதிர்நோக்கும்,

கார்த்திக் சிதம்பரம் 

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top