தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்னர் வீட்டின் அருகில் உள்ள பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றேன். சிறிது நேரம் காத்திருப்புக்குப் பின்னர் அவரைச் சந்தித்தேன். என் பல்லில் இருந்த ஒரு கிரீடத்தை (Crown) மாற்ற வேண்டும் என்று கூறினார். சரி என்றேன்.
பல் மருத்துவர், பல்லில் மாற்ற வேண்டிய வேலையைக் கருவிகளைக் கொண்டு செய்ய ஆரம்பித்தார். சிறப்பாகப் பணி செய்தார். வலிக்கவில்லை. அவர் பணியைச் செய்து முடித்தப் பின்னர், பின் நன்றாகச் செய்தீர்கள் டாக்டர் என்று நன்றி கூறினேன்.
அவருக்குக் கேட்கவில்லை. என்ன சொன்னீர்கள் என்று கேட்டார் நன்றாகப் பணி செய்தீர்கள் டாக்டர் என்று மறுபடியும் கூறினேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. சிரித்தார்.
ஒரு மணி நேரம் ஓய்வுக்குப் பிறகு, மருத்துவரை மீண்டும் சந்திக்க வேண்டி இருந்தது. இந்த முறை என் பல்லில் அவர் வேலை செய்யும்போது அதிக கவனம் எடுத்துக் கொண்டார். இது நன்றாகத் தெரிந்தது.
பல சமயங்களில், நாம் உள் அன்போடு செலுத்தும் நன்றியும், பாராட்டும், ஒருவர் நம்மைவிட உயர் இடத்தில் இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்தி நம்மிடம் நல்ல கவனம் செலுத்த செய்யும்.
நன்றி!!.
இப்படிக்கு
கார்த்திக் சிதம்பரம்