பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஜூலை 26 தொடங்கி இன்று நிறைவடையும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். வெல்லும் வரை எதுவும் உறுதி அல்ல, வென்ற பிறகு நிலைமை மாறலாம், எதுவும் எப்போதும் நடக்கும், நிலைமை மாறும் என்பதற்கு எல்லாம் இந்த ஒலிம்பிக் போட்டிகள் சிறந்த உதாரணம்.
நம் இந்தியக் குழுவின் செயல்திறன் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் எப்படி இருந்தது? பதக்கங்கள் வெல்வது எளிதல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். கடந்த வருடங்களில் இந்தியாவும், சீனாவும் பெற்ற பதக்கங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா-சீனா ஒப்பீடு
1968 | 1992 | 1996 | 2000 | 2004 | 2008 | 2012 | 2016 | 2020 | 2024 | |
இந்தியா | 0 | 0 | 1 | 1 | 1 | 3 | 6 | 2 | 7 | 6* |
சீனா | 28 | 54 | 50 | 58 | 63 | 100 | 92 | 70 | 89 | 83* |
*பதக்கங்கள் கூடலாம்
1988ல் 28 பதக்கங்களை வென்ற சீனாவால் 1992ல் 54 பதக்கங்களை வெல்ல முடியும் போது, திறமைமிக்க மனிதர்கள் இருக்கும் நம் இந்தியாவில், ஏன் நம்மால் இன்னும் இரட்டை இலக்க எண்களை தொட இயலவில்லை?
மத்தியில் நம் மோடி அரசு பதவியேற்ற கடந்த 10 வருடங்களில், விளையாட்டுத் துறையில் குறிப்பிட்டு சொல்லும் படி பெரும் மாற்றங்கள் நிகழவில்லை என்பது தரவுகள் சொல்லும் உண்மை.
பணம் நம்மிடம் நிறைய இருக்கிறது. இருக்கும் பணத்தை நல்ல முறையில் செலவழிப்பது. என்பது எளிதான காரியம் அல்ல. டிஜிட்டல் துறையில் (பணப் பரிவர்த்தனை), நம் இந்தியாவில் கடந்த பத்து வருடங்களில் நாம் அடைந்த முன்னேற்றத்தை ஒப்பிடுகையில், விளையாட்டுத் துறையில் நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.
விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு விளையாட்டுத் துறையில் அரசியல் அகற்றப்பட வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் அல்லாமல், வெற்றி பெற போராடுபவர்களுக்கும், ஊக்கம், பயிற்சி போன்றவை அவசியம்.
நமக்கு சந்தைப்படுத்துவதில் இருக்கும் கவனம், செயல்படுத்துவதில் இருத்தல் வேண்டும். நேர்மையும், வெளிப்படைத்தன்மையை நம்மை வெற்றிகள் நோக்கி நகர்த்தும்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்