இதயம் கவர்ந்த இதய விளக்குகள்
Heart charmed heart lights

இதயம் கவர்ந்த இதய விளக்குகள்

சென்னையில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இதய வடிவிலான போக்குவரத்து சமிக்ஞை (Traffic Signal) விளக்குகள் மிகவும் பாராட்டுக்குரியது.

லண்டனில் டிச. 10, 1868 இல் முதல் முறையாக நாடாளுமன்றம் சதுக்கம் என்னும் இடத்தில் முதன் முதலில் போக்குவரத்து மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

அமெரிக்காவில் ஆகஸ்ட் 5ம் தேதி, 1914ம் ஆண்டு போக்குவரத்து விளக்குகள் பொருத்தப்பட்டன. இதை நினைவு கூறும் விதமாக நம் சென்னையில் கடந்த சில வா வாரங்களாக, சாலைகளில் உள்ள சமிக்ஞை விளக்குகள் இதய வடிவில் ஒளிர விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உயிரிலும் உள்ள இதயத்தை குறிக்கும் விதமாக இந்த விளக்குகள், நம் வீட்டில் நமக்காக ஒரு இதயம் காத்திருக்கிறது என்கிதைக் குறிக்கிறது. இதய விளக்குகள் சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்க ஒளிர விடப்பட வேண்டும்.

கடந்த வருடம் (16/7/23) அன்று எழுதிய ஞாயிறு கடிதத்தில், 2030 ஆம் ஆண்டில் இறப்புகளை 50% குறைக்கும் உலகளாவிய சாலை பிரகடனத்தில் (Global Declaration) இந்தியா கையெழுத்திட்டது என்று எழுதியிருந்தோம். 

இந்த இலக்கை நோக்கிப் பயணிக்க, இது போன்ற மாற்றங்கள் இதய விளக்குகள் ஒரு பெரும் கருவியாக இருக்கும். நம் சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு பாராட்டுக்கள். 

இதை நிறுத்தாமல் தொடர்வோம். 

நன்றி. 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top