கையெழுத்து (Signature)
Signature

கையெழுத்து (Signature)

சிறு வயதில் முதல் முறை கையெழுத்து போடச் சொல்லும்போது நம் அனைவருக்கும் ஒரு வகை மகிழ்ச்சி இருக்கும். எப்படி கையெழுத்துப் போட வேண்டும் என்று நாம் நம் பெற்றோரைப் பார்த்து அல்லது நண்பர்களை பார்த்துக் கற்றுக் கொள்வோம். நானும் இப்படித்தான் கையெழுத்துப் போடக் கற்றுக் கொண்டேன்.

கடந்த வருடம் மே மாதம் ஜப்பான் நாட்டிற்கு விசா விண்ணப்பிக்கும் போது, அமெரிக்கா ஹூஸ்டன் (Houston) நகரத்தில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் என் கடவுச்சீட்டை (Passport) தொலைத்து விட்டனர்

புதிய கடவுச் சீட்டு பெற இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்த போது, கையெழுத்து மாற்றம் இருக்கா என்று விண்ணப்பத்தில் ஒரு கேள்வி. ஆம் என்று சொல்லி அன்றிலிருந்து என் கையெழுத்தைத் தமிழில் மாற்றிக் கொண்டேன்.கடவுச்சீட்டு தொலைந்ததில் நடந்த ஒரு நல்ல மாற்றம் இது புது கடவுசீட்டில் தமிழ் கையெழுத்து.

நம் தாய் மொழியில் கையெழுத்திடும்போது ஒரு வித பெருமையும், தன்னம்பிக்கையும் உருவாகிறது. நம் நாட்டோடும், மொழி யோடும் ஒரு பிணைப்பை உருவாக்குகிறது

நம் தாய் மொழியில் கையெழுத்திடுவதில் தாய்மொழியில், தமிழில் கையெழுத்து-ஒரு பெருமை

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top