CHAT WITH KC சமூகத்திற்கு நன்றி
CHAT WITH KC சமூகத்திற்கு நன்றி

CHAT WITH KC சமூகத்திற்கு நன்றி

ஒரு சோதனை முயற்சியாக ஆரம்பித்த நம் CHAT WITHKC YouTube சேனல் 0ல் ஆரம்பித்துக் கடந்த மாதம் 10,000 சந்தாதாரர்களை (Subscribers) எட்டியது.

YouTube சேனல் நடத்துவது என் முழுநேரப் பணி அல்ல.

மொழி, கலாச்சாரம், தொழில், பயணம் போன்ற பலவற்றால் நான் பயன் அடைந்து உள்ளேன். ஒருவரின் குரல் கேட்கப்பட்டு மாற்றம் உருவாகக் கேட்போர் கூடம் (Audience) அவசியம். இதுவே சேனல் உருவாக்க முடிவு செய்ததன் நோக்கம்.

ஆரம்பத்தில் தட்டுத் தடுமாறி போன் கேமராமூலம் சுயமாகக் காணொளிகள் பதிவு செய்து வெளியிட்டோம். அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகள்குறித்து பேச ஆரம்பித்துப் பயண காணொளிகள் முயற்சி செய்து, பின் விருந்தினர் உரையாடல் (Podcast) காணொளிகள் என்று தொடர்ந்து 10,000 Subscribers எட்டியுள்ளோம். சந்தாதாரர்கள் சேர்க்க, கட்டண விளம்பரங்கள் (Paid Ads) என்று செலவிடவில்லை.

நம்மோடு சேர்ந்து பயணிக்கும் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உடன் பயணிக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

CHAT WITHKC ஒரு கூட்டு முயற்சி…

சேர்ந்து பயணிப்போம்… வாங்க!

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category:
Share
Download Download
Top