நேபாள் மரணங்கள்
நேபாள் மரணங்கள்

நேபாள் மரணங்கள்

ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி நேபாளில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு வெள்ளப்பெருக்கால் நேர்ந்த 1000க்கும் மேலான உயிரிழப்புகள் உலகில் எங்கும், எவருக்கும் நிகழ்ந்திருக்கலாம். உயிரிழந்தவர்களில் பலர் வெளிநாட்டவர். எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் கூட அமெரிக்காவில் இருந்து நேபாளுக்கு பயணித்த அவர்களின் நண்பர்களைக் காணவில்லை என்று வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், நானும் என் மனைவியும் மவுண்ட் கைலாஷ் யாத்திரைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து பணம்எல்லாம் கட்டினோம். ஆனால் அச்சமயத்தில் இந்தியர்களுக்கு விசா சிக்கல்கள் சில இருந்தன. பயணம் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது மரணித்தவர்களில் பலர் அந்த யாத்திரைக்கு சென்றவர்கள்தான்.

காலநிலை மாற்றங்கள் குறித்து கேள்விப்படும்போது நம்மில் பலர் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் இது போன்ற பாதிப்புகள் வரும்போது வலி நூறு மடங்கு அதிகம். இயற்கையை வெல்ல முடியாது.

நாம் (நான் உட்பட) அங்கும் இங்கும் குப்பைகளைப் போடுகிறோம். குப்பைகள் கடலில் கலைக்கின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள்? நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாக உள்ளதா? பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள் இது போன்று பல கேள்விகளைக் கேட்பது ஊக்கம் தருகிறது.

இந்த நேபாள இயற்கை சீற்றத்தால் மரணம் அடைந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இயற்கையோடு ஒன்றுபட்டால், ஊண்டு வாழ்வு.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags: Tamil
Share
Download Download
Top