இனிய தீபாவளி வாழ்த்துகள்
இனிய தீபாவளி வாழ்த்துகள்

இனிய தீபாவளி வாழ்த்துகள்

ஞாயிறு கடிதம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய  தீபாவளி வாழ்த்துகள். தீபாவளி பண்டிகை தங்களுக்கு  உடல் மற்றும் அனைத்து செல்வங்களையும் நல்கட்டும்.

சிறுவயதில், தீபாவளித் திருநாளை இப்போது போல அப்போதும் எதிர்நோக்குவோம். விடியற்காலையில் எழுந்து,  அப்பத்தாவின் காலில் விழுந்து, புதுத் துணிகள் வாங்கிக்கொண்டு  அணிந்து, வெடி வெடிப்பது வழக்கம். தீபாவளி அன்று புதுப்படம் பார்ப்பதும் வழக்கமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெடிகள் மீது இருந்த ஆசை விலகியது.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி வாழ்த்துகள்  பரிமாறுவோம். எங்கள் அப்பா ‘இனிய தீபாவளி வாழ்த்துகள்’  என்று அழகாக தமிழில் கூறினாலும், நான் ‘Happy Diwali’ என்று நான் பதிலுக்கு சொல்வேன். தமிழில் கூறுவது  நல்லது அல்ல, ஒரு படி குறைவு என்று கூட எண்ணியது உண்டு.

 நாம் சார்ந்த சமூகம், கல்வி, ஆங்கிலேயர் ஆதிக்கம்  என்று இதற்கு பல காரணங்களைக் கூறலாம். ஆனால்  இன்று நான் செய்த தவறை  நன்கு உணர்கிறேன்.

நம் தமிழ்நாட்டில், நம் தமிழர்கள் மத்தியில் தமிழில்  வாழ்த்துகளைத் தெரிவிக்காமல் வேறு எப்படித் தெரிவிப்பது?  

நீங்கள் தமிழ் பேசுபவராக இருந்தால், தமிழர்களிடம்  தமிழில் தீபாவளி வாழ்த்துகளைப் பகிருங்கள். கொஞ்சம்  கொஞ்சமாக பெரு மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

தமிழில் வாழ்த்துகள் கூறுவது அறியாமை அல்ல. இதுவே அறிவாற்றல். இதுவே சமூக மாற்றம்.  மறந்திட வேண்டாம். தமிழில் உங்கள் தீபாவளி வாழ்த்துகளைப் பகிருங்கள். 

இது நம் தமிழ். நம் தமிழ்நாடு.

இனிய தீபாவளி வாழ்த்துகள்

 நன்றி.
கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top