ஒரு காலத்தில் வசதி படைத்தோர்க்கு மட்டுமே எட்டும் பொருட்கள், காலப் போக்கில் அனைவருக்கும் மிக எளிதாகக் கிடைக்கும். உதாரணமாக, கேமரா மிகச் சிலரின் வீடுகளில் மட்டும் ஒரு காலத்தில் இருக்கும். இன்று கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைவரின் கைகளிலும் போன் வடிவில் ஒரு கேமரா உள்ளது. ஏன்? நம் இந்தியாவில், 80களில் வீட்டில் ஒரு போன் இணைப்பு வாங்க, பலரின் சிபாரிசுகள் தேவைப்படும். ஆனால் இன்று அனைவரின் கைகளிலும் ஒரு அலைபேசி.
80, 90, 2000 களில் நம் ஊரில் STD Booth என்று ஒன்று இருக்கும். கல்லூரிகளில் படிக்கும்போது அந்தக் கடைகளைப் பயன்படுத்தி தான் பெற்றோருடன் பேசுவோம். ஆனால் இன்று, அந்தக் கடைகளை நடத்திக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்கிறார்கள்? வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விட்டது.
வரலாற்றைச் சற்று நோக்கும்போது இச்செய்திகள் எளிதாகப் புரிகின்றன. அதுபோல்தான் செயற்கை நுண்ணறிவும் (AI) இதுபற்றித் தொழில் நுட்பத் துறையில் இருப்போர் தினமும் பேசிக் கொண்டிருந்தாலும், இதனால் என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன?
செ.நு என்றால் என்ன? “நேற்று இருந்த வேலைகள் இன்று இருக்குமா? நாளை? அடுத்த வாரம்.
நன்றி….
கார்த்திக் சிதம்பரம்