நாம் தமிழில் பேசும்போது ஆங்கில சொற்களைக் கலந்து உரையாடுகிறோம். ஆனால் ஆங்கில மொழியை பேசுகையில் தமிழ் கலப்பதில்லை. தமிழில் ஆங்கிலத்தில் மாறி மாறி பேசுகையில் தமிழோடு சேர்ந்து ஆங்கிலமும் வந்து விடுகிறது. இந்தத் தவறை நான் தினசரி செய்கிறேன். என்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தாலும், நான் பேச நினைப்பதற்கான தமிழ் வார்த்தை சட்டென தெரியாது அப்படியே தெரிந்தாலும் அங்கில சொற்களின் மொழிபெயர்ப்பு தமிழுக்கு பொருந்தாதது போல் தெரியும்.
உதாரணமாக ‘MARKETING’ என்ற ஆங்கில சொல்லுக்கு உரிய தமிழ் சொல் என்னவென்று எனக்கு முதலில் தெரியாது. தேடிப் பார்த்தபோது ‘சந்தைப் படுத்துதல் ‘ என்ற மொழிபெயர்ப்பைக் கண்டேன். சந்தைப்படுத்துதல் என்று எழுதினால், பேசினால் அனைவருக்கும் புரியுமா என்ற ஐயம் இருந்தது.
சந்தைப்படுத்துதலைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.
இதை கடந்த ஒரு வருடத்தில் பலமுறை பயன்படுத்தி உள்ளேன் இப்போது ‘சந்தைப் படுத்துதல்’ என்று எழுதும் போது ஒரு வித நம்பிக்கையும், தைரியமும் வருகிறது.
பழகப் பழகத் தான் வார்த்தைகள் பிடிபடும். ஒரிரு முறை பயன்படுத்தினால் இது பொருந்துகிறதா? அல்லது வேறு மொழியாக்கம் தேவையா? என்பது தெரிந்துவிடும்.
தமிழை சந்தைப்படுத்துவோம் 🙂
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்